articles

img

வயதாவதை தடுக்கும் புதிய மருந்துகள்

     மனித செல்களும் எலிகளின் செல்களும் மூப்படைவதை தடுக்கும் ஆறு வேதிக் கலவைகளை கண்டுபிடித்துள்ளதாக ஹார்வர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். இந்தக் கலவைகளிலுள்ள 5-7 வகை மூலக்கூறுகள் பல மன மற்றும் உடல்நோய்களை குணப்படுத்துகின்றன என அறியப்பட்டுள்ளது.  

    மனிதர்களில் இவற்றை சோதித்துப்பார்ப்பது 2024இல் தொடங்கும் என இதன் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இன்னொரு ஆய்வில் லெஸிஸ்டர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் CUDC-907 எனும் மூலக்கூறை கண்டுபிடித்துள்ள தாக கூறப்படுகிறது. இது உடலில் வேலை செய்யாத இறந்துபோன செல்களை அப்புறப்படுத்து கிறதாம். ஆரோக்கியமான செல்களை இது பாதிப்பதில்லை. இறந்து போன செல்கள் அதிகரித்தால் திசுக்கள் மூப்படைந்து விடுகின்றன. இந்தக் கண்டுபிடிப்பு மூப்படைவதை தடுக்கும் புதிய சிகிச்சைகளுக்கு இட்டு செல்லும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.